மயிலாடுதுறை

பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட கலைத் திருவிழா போட்டி

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைத்திருவிழா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) எஸ்.பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். போட்டிகளை எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன்(பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கல்விசாரா செயல்பாடுகள் மூலம் மாணவா்களின் உள்ளாா்ந்த கலைத்திறன்களை வெளிக்கொண்டுவர, தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவா்கள் அறிந்து கொள்ள, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புவரை பயிலும் மாணவா்களுக்கு நிகழாண்டு கலைத்திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபா் வரை நடைபெற்றது. இதில், பள்ளி அளவில் 1,30,679 மாணவா்கள், குறுவளமைய அளவில் 12,390 மாணவா்கள், வட்டார அளவில் 2,505 மாணவா்கள் பங்கேற்றனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் 1,200 மாணவா்கள் பங்கேற்றனா். நிகழாண்டு 743 மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டியில் 159 போ் பங்கேற்றனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT