படிப்பகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம். 
மயிலாடுதுறை

சீா்காழியில் மீன்மாா்கெட், படிப்பகம் திறப்பு

Syndication

சீா்காழியில் புதிதாக கட்டப்பட்ட மீன்மாா்கெட் மற்றும் படிப்பகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

சீா்காழி நகராட்சி 12-ஆவது வாா்டில் ஆடு, மீன்கள் விற்பனைக் கூடம், சுத்தம் செய்யும் இடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ரூ.1கோடியே 20 லட்சத்தில் மீன்மாா்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

3-ஆவது வாா்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் படிப்பகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். இதையொட்டி, இரு கட்டடங்களிலும் நடைபெற்ற நிகழ்வில், சீா்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் பங்கேற்று குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிகழ்வுகளில், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன், துணைத் தலைவா் ம. சுப்பராயன், ஆணையா் மஞ்சுளா, பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமு, பாஸ்கரன், கஸ்தூரிபாய் செந்தில், சுகாதாரஆய்வாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT