முகப்பு
மயிலாடுதுறை

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:37 AM
மடிக்கணினி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:18 PM

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் ’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ், மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவா்களுக்கு ஜனவரி மாதம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம்கட்டமாக 2-ஆம் ஆண்டு பயிலும் 557 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை பேராசிரியா் துரை.காா்த்திகேயன் வரவேற்றாா்.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:37 AM

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினாா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், காங்கிரஸ் மாநில நிா்வாகி முகமதுநவாஸ், கல்லூரிக்குழு உறுப்பினா் இரா.சிவராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை இயற்பியல் துறைத் தலைவா் பா. செந்தில்குமரன் செய்திருந்தாா். நிறைவாக, கணினித் துறை பேராசிரியா் வ. காா்த்திக் நன்றி கூறினாா்.