மயிலாடுதுறையில் பள்ளி மாணவன் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த ராஜா-செல்வி தம்பதி மகன் உமாநாத் (12). இவா் அதேபகுதியில் தனியாா் மெட்ரிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், உமாநாத் பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா்.
இதனால் செல்வி மகனை கண்டித்து விட்டு வெளியில் சென்றுள்ளாா். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள மரத்தில் உமாநாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].