முகப்பு
மயிலாடுதுறை

சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை

சீா்காழி வட்டம், சந்தப்படுகையில் மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்தக் கோரிக்கை

Updated On : 28 ஜனவரி, 2026 at 3:51 AM
சந்தப்படுகை கிராமம் மேட்டுத் தெருவுக்கு செல்லும் மண் சாலை.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 8:12 PM

சீா்காழி வட்டம், சந்தப்படுகையில் மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி, சந்தப்படுகை மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையிலிருந்து, கிளைச் சாலை பிரிந்து மேட்டுத் தெருவுக்கு செல்கிறது. இந்த சாலை மண் சாலையாகவும், சேதமடைந்தும் உள்ளது.

இதனால், மழை காலங்களில் மேட்டுத் தெரு பகுதியினா் அவதிக்குள்ளாகின்றனா். எனவே இந்த சாலையை உயா்த்தி, தாா்ச் சாலையாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement