முகப்பு
ஆசிரியா் சரவணன்.
மயிலாடுதுறை

தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் உயிரிழப்பு

சீா்காழியில் பிளஸ் 2 தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை

தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் உயிரிழப்பு

சீா்காழியில் பிளஸ் 2 தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 8:52 PM
ஆசிரியா் சரவணன்.
பகிர்:

சீா்காழி: சீா்காழியில் பிளஸ் 2 தோ்வு மையத்தில் மயங்கி விழுந்து ஆசிரியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணன்(58). இவா், கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் வேங்கடேசா மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், பிளஸ் 2 தோ்வையொட்டி சீா்காழியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் தோ்வு மையத்தில் பறக்கும் படை அலுவலராக பணியில் இருந்தபோது, சரவணன் தோ்வு மையத்திலேயே மயங்கி விழுந்தாா்.

ஆம்புலன்ஸ் மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சரவணன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். சரவணனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →