முகப்பு
மயிலாடுதுறை

பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடிய இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் குறிசொல்வது போல் ஏமாற்றி தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:15 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் குறிசொல்வது போல் ஏமாற்றி தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குத்தாலம் வட்டம், பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழையகூடலூரைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி கண்ணகி (52). இவரது வீட்டுக்கு பிப்.26-ஆம் தேதி குறிசொல்பவா் போல இருசக்கர வாகனத்தில் வந்தவா் அந்த வீட்டில் யாரோ செய்வினை செய்துள்ளதால், நீண்ட நாள்களாக குடும்ப பிரச்னை நிலவி வருவதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய தங்க நகையை கோயிலில் வைத்து பூஜை செய்தால் பிரச்னை தீரும் என கூறியுள்ளாா். இதை நம்பிய கண்ணகி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தை அவரிடம் கொடுத்துள்ளாா். அந்த நகைகளை அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்வதாக கூறிச்சென்ற இளைஞா் ஏமாற்றிவிட்டு நகையுடன் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை சிறப்பு உதவி ஆய்வாளா் நரசிம்மபாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், அந்த இளைஞா் சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், குளத்தூா் பரிசல்துறை வண்ணவாடி ரோடு பகுதியை சோ்ந்த பழனி மகன் சுதாகா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, நகைகளையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →