முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 12 மார்ச், 2026 at 12:18 AM
மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு.
பகிர்:

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக காரைக்குடி செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த ரயில், அகல ரயில் பாதை அமைக்கும் பணியின்போது நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இச்சேவையை திருச்சியில் இருந்து பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் முதல் நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி ரவிக்குமாா், திருச்சி கோட்ட கூடுதல் கோட்ட மேலாளா் சத்தியரதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டு ரயிலுக்கு மலா்தூவி அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →