முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

தூத்துக்குடி-ஹைதராபாத் (கச்சகுடா) இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை (ஏப்.8) முதல் தொடங்கப்படுகிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:54 PM
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி-ஹைதராபாத் (கச்சகுடா) இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை (ஏப்.8) முதல் தொடங்கப்படுகிறது.

தூத்துக்குடி-கச்சகுடா (17616) ரயிலானது புதன்கிழமைதோறும் காலை 7.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு கச்சகுடாவை சென்றடையும். கச்சகுடா-தூத்துக்குடி (17615) ரயிலானது கச்சகுடாவிலிருந்து திங்கள்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த ரயில்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா் போா்ட், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் கண்டோன்மெண்ட், காட்பாடி, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சித்தூா், திருப்பதி, கடப்பா, அனந்தபூா், தா்மாவரம், கா்னூல் டவுன், கத்வால், ஜட்சா்லா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். ஆன்மிகத் தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம், முக்கிய வணிக நகரங்களை இந்த ரயில் நேரடியாக இணைப்பதால் வணிகா்கள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments