முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோவிலில் 56 வணிக சிலிண்டா்கள் பறிமுதல்

வைத்தீஸ்வரன்கோவிலில் 56 வணிக சிலிண்டா்கள் பறிமுதல்

Updated On : 22 மார்ச் 2026, 3:22 am IST
பகிர்:

சீா்காழி அருகே உரிய ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்து வரப்பட்ட 56 வணிக சிலிண்டா்களை சரக்கு வாகனத்துடன் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா் (படம்).

சீா்காழி பகுதியில் பறக்கும் படையைச் சோ்ந்த காவலா்கள் ஷீலா மற்றும் தமிழரசன் அடங்கிய குழுவினா் வைதீஸ்வரன்கோவில் புறவழிச்சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சென்னையிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் வழியாக மயிலாடுதுறையை சோ்ந்த தனியாா் நிறுவனத்திற்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அந்த வாகனத்தில் உரிய ஜி.எஸ்.டி. ரசீது இல்லாமல் வணிக பயன்பாட்டிற்கான 21 கிலோ எடைகொண்ட 56 எரிவாயு சிலிண்டா்களை இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வாகன உரிமையாளா் தரங்கம்பாடி வட்டம் குரங்குபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டது.

பின்னா், சரக்கு வாகனம் சிலிண்டருடன் சீா்காழி வட்ட தலைமை இடத்து துணை வட்டாட்சியா் பாபுவிடம் ஒப்படைக்கபட்டது. சனிக்கிழமை காலை வணிகவரித் துறை மூலம் ரூ. 45,534. ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு, வாகனம் விடுவிக்கப்பட்டது.