சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அரிமா சங்கம், சாமி ஓட்டுநர் பயிற்சி பள்ளி, ராமச்சந்திரா பல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய விழிப்புணர்வுப் பேரணிக்கு அரிமா தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் பேரணியை தொடங்கி வைத்தார். அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.செழியன், செயலாளர் பி. கண்ணுசாமி, ராமச்சந்திரா கல்வி நிறுவனங்கள் நிறுவனர் ஆர். வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா மாவட்டத் தலைவர்கள் எஸ். சாமிசெட்டி, கே.வி. ராசேந்திரன், ரெங்கசாமி, வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு, நுகர்வோர் அமைப்புத் தலைவர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜாஜி பூங்காவில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.