முகப்பு
நாகப்பட்டினம்

மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி

மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல்களால், வரும் மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

Updated On : 13 மே 2013, 1:30 am IST
பகிர்:

மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல்களால், வரும் மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

நாகையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி :

ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, ராணுவ ஜீப்புகள் வாங்கியதில் அவரது நண்பர் கிருஷ்ணமேனன் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானர். ஊழலை மறைத்து அவருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கினார் நேரு.

Advertisement

Advertisement

அதே நிலைதான் தற்போதும் காங்கிரஸில் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியின் நிலக்கரி ஊழல், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல். சுமார் ரூ.1.96 லட்சம் கோடி மதிப்பில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையின் போது, முதலில் ஊழலை மறுத்தது மத்திய அரசு. ஆனால், தொடர் கண்டனங்களால் அமைச்சர்கள் பதவி விலகினர். இதன் மூலம், ஊழல் உறுதியாகியுள்ளது.

இந்த ஊழல்கள் அனைத்தும் தெரிந்த மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்கத் தகுதியற்றவர் என்பதால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பாஜகவே காரணம். கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாததும், அடுத்தடுத்து 3 முதல்வர்கள் மாறியதையும் மக்கள் ஏற்கவில்லை. இதிலிருந்து பாஜக பாடம் கற்றுக் கொண்டுள்ளது. மத்திய காங்கிரஸ் அரசின் தொடர் ஊழல்களால், மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றார் இல. கணேசன்.

பாஜக மாவட்டத் தலைவர் டி. வரதராஜன், செயலர் கே. நேதாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.