நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில்  இலக்கை விஞ்சி கொடிநாள் வசூல்: ஆட்சியர் தகவல்

DIN

நாகை மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூல் இலக்கு விஞ்சப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிநாள் விழாவில் அவர் மேலும் பேசியது : 
தேச பாதுகாப்புக்காக இரவு, பகல் பாராமல் பணியாற்றும் படைவீரர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவை. அந்த வகையில், படைவீரர்களுக்கும், அவர்களின்  குடும்பத்தினருக்கும் குடிமக்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதனடிப்படையில், கொடிநாள் விழாவின்போது வசூல் செய்யப்படும் தொகை, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக செலவிடப்படுகிறது. 
நாகை மாவட்டத்துக்கு 2017-ஆம் ஆண்டுக்கான கொடி நாள் வசூல் இலக்காக ரூ. 67.38 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 73.57 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இலக்கை விஞ்சிய இந்த வசூல் வரும் காலங்களில் மேலும் அதிகமாக வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார். 
முன்னதாக, கொடிநாள் வசூல் உண்டியலில் பணம் செலுத்தி, கொடி நாள் வசூலைத் தொடங்கி வைத்த ஆட்சியர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 14 பேருக்கு ரூ. 2.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT