ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம்ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மணல் இறக்குமதியை ஊக்கப்படுத்தி, மாற்று மணல் உற்பத்தியை உத்தரவாதப்படுத்த வேண்டும். புலம் பெயரும் தொழிலாளர் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. ராமன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வி.எம். மகேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ. சொக்கலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கட்டடத் தொழிலாளர் சங்கம் மற்றும் சார்பு சங்கங்களின் நிர்வாகிகள் சோமு. இளங்கோ, சி. மதியழகன், ஆர். கர்ணன், கே. ராஜேந்திரன், கே. செந்தில்குமார், பாரதிமோகன், பி. சண்முகவேல், டி. இளங்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.