ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம்ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி செஞ்சுருள் சங்கம், நாகை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு, கல்லூரியின் செயலர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். கண்ணன், இயக்குநர் அ. வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட மேற்பார்வையாளர் சக்திவேல், ஆலோசகர் எம். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
கருத்தரங்கையொட்டி, மாணவர்களிடேயே ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என். நளன், ஆசிரியை விஷ்ணுப்பிரியா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.