நாகப்பட்டினம்

அத்தியாவசியப் பொருள்கள் பரிவர்த்தனை குறுந்தகவலை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

DIN

குடும்ப அட்டைதாரர்கள், நியாயவிலைக் கடைகளில் பெறும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்த பரிவர்த்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.
நாகை மாவட்டம், ஆக்கூர் மற்றும் சுற்றுப் பகுதிளில் செவ்வாய்க்கிழமை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆட்சியர், மடப்புரம் நியாயவிலைக் கடையில் திடீரென  ஆய்வு செய்தார்.
அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, விற்பனை பதிவேடுகள் பராமரிப்பு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை மின்னணு இயந்திரத்தில் பதிவேற்றும் பணி, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, சுய விவரங்கள் பெறப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் குறித்த பரிவர்த்தனை குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்டவை குறித்து  ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ஆரம்ப சுகாதார நிலையங்களை உரிய சுகாதாரத்துடன் பராமரிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, தியாகராஜன், வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT