நாகப்பட்டினம்

ஏவிசி கல்லூரியில் மொழி-மனம்-வளம் கருத்தரங்கம்

DIN

மயிலாடுதுறையை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மொழி-மனம்-வளம் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தமிழாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் துரை. குணசேகரன் அறக்கட்டளை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் துரை. குணசேகரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க. கருணாகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மொழி-மனம்-வளம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜி. மகேஷ், வாழ்த்துரை வழங்கினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் சு. தமிழ்வேலு வரவேற்றார். அறக்கட்டளையின் நிறுவனர் துரை. குணசேகரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT