நாகப்பட்டினம்

தகட்டூரில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு அளிக்கக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகட்டூர், தாணிக்கோட்டகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கக் கோரியும், நிலுவையில் உள்ள ஊதியத்தை தாமதிக்காமல் வழங்க வலியுறுத்தியும்  சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ந. சேகர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து வேலை அளிப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு, தகட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் சிவகுரு. பாண்டியன், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி முருகானந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT