நாகப்பட்டினம்

மருத்துவமனையை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகங்களையும், உள்கட்டமைப்புகளையும் உரிய வகையில் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.

DIN

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகங்களையும், உள்கட்டமைப்புகளையும் உரிய வகையில் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கண் சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, காசநோய் பிரிவு, மருந்தகம், மருந்துகள் பாதுகாப்பு அறை, படுக்கை விரிப்புகள் சுத்தம் செய்யும் பிரிவு ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு
செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, நோயாளிகளுக்கான படுக்கை விரிப்புகள், மருத்துவர்கள் அணியும் மேலங்கிகள் உள்ளிட்டவைகளை உரிய வகையில் சுகாதாரமாக சலவை செய்து வழங்க வேண்டும் எனவும், கண் அறுவைச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடல்நிலைக்கேற்ப மருத்துவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சித்த மருத்துவப் பிரிவில் வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனை வளாகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும்,  கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, நிலைய மருத்துவ அலுவலர் முருகப்பன், சித்த மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிவியர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT