நாகப்பட்டினம்

கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு: நாகை மீனவர்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

DIN

நாகையில் இந்திய கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாகை நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு ஆகிய 2 மீனவக் கிராமங்களுக்கிடையே இந்திய கடற்படை முகாம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு, 2 கிராம மீனவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே 3 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாத நிலையில் திங்கள்கிழமை மாலை நாகை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.
இதையடுத்து, நம்பியார் நகர், ஆர்யநாட்டுத் தெரு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்தனர். 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 100-க்கும் அதிகமான விசைப் படகுகளும், 300-க்கும் அதிகமான பைபர் படகுகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
செவ்வாய்க்கிழமை காலை நாகை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து 2 கிராம மீனவர்களும் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கடற்படை முகாம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, கடற்படை முகாம் அமைக்கும் முடிவைக் கைவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
போராட்டம் வாபஸ்...
பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை ஆர்யநாட்டுத் தெரு மீனவப் பஞ்சாயத்துக் கூட்டம், மூகாம்பிகை கோயிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்படி, வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT