நாகப்பட்டினம்

மாணிக்கப்பங்கு கிராமத்தில் ரூ. 7 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: எம்எல்ஏ இயக்கிவைப்பு

DIN

தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாணிக்கப்பங்கு கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைத்தார்.
கடலோரக் கிராமங்களில் ஒன்றான  மாணிக்கப்பங்கு கிராம மக்கள், குடிநீரில்   உப்புநீர் கலந்து வந்ததால் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை கிராமத்தில் வைக்க வேண்டும் என பூம்புகார்  சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT