நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: கடல் சீற்றம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி தெற்கு திசையிலிருந்து  வழக்கத்தைவிட வேகமான கடல் காற்று வீசி வருகிறது. காற்றில் அதிகளவில் மணல் துகள்கள்  கலந்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கோடியக்கரை முதல் வேதாரண்யத்தின் தெற்கு பகுதி கடல் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசுவதால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், சீரான மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT