நாகப்பட்டினம்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: நாகை மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 91.40

DIN

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 91.40 சதவீதம் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்தத் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 1.97 சதவீதம் அதிகம்.
நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 272 பள்ளிகளைச் சேர்ந்த 10,833 மாணவர்களும், 11,466 மாணவிகளும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதன் மொத்த எண்ணிக்கை - 22,299.
இதில், 9,641 மாணவர்களும், 10,741 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை- 20,832. தேர்ச்சி வீதம் - 91.40. இந்தத் தேர்ச்சி வீதம், கடந்த ஆண்டை விட 1.97 சதவீதம் அதிகம்.
கல்வி மாவட்ட அளவில்...
நாகை கல்வி மாவட்டத்தில் 4,525 மாணவர்களும், 4,800 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 4,111 மாணவர்களும், 4,558  மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 92.97. மாணவர்களின் தேர்ச்சி வீதம் - 90.85. மாணவிகளின் தேர்ச்சி வீதம் - 94.96 .
மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 6,308 மாணவர்களும், 6,666  மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 5,530 மாணவர்களும், 6,183 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.28. மாணவர்களின் தேர்ச்சி வீதம் - 87.67. மாணவிகளின் தேர்ச்சி வீதம் - 92.75.
நாகை மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89 சதவீதமும், மாணவிகள் 93.68 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பின்னடைவில் நாகை...
நாகை மாவட்டத்தின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 2013-ஆம் ஆண்டில் 79.53-ஆக இருந்தது. பின்னர், 2014-ஆம் ஆண்டில் 82.27 சதவீதமாகவும், 2015-ஆம் ஆண்டில் 89.27 சதவீதமாகவும், 2016-ஆம் ஆண்டில் 89.43 சதவீதமாகவும் இருந்தது. நிகழாண்டில் 91.40 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளைப் போலவே நிகழாண்டிலும் நாகை மாவட்டத்தின் தேர்ச்சி வீதம் ஏறுமுகத்திலேயே உள்ளது.
இருப்பினும், மாநில அளவிலான தேர்ச்சி சதவீத பட்டியலில் நாகை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டை விட நிகழாண்டில் அதிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மிகக் குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்றிருந்த மாவட்டங்களின் பட்டியலில் 6-ஆம் இடத்தைப் பெற்றிருந்த நாகை மாவட்டம், நிகழாண்டில் மேலும் பின்னடைவுக்குள்ளாகி மிகக் குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் 3-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT