முகப்பு
நாகப்பட்டினம்

மணல் லாரிகளால் போக்குவரத்துப் பாதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே  மணல் லாரிகளால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே  மணல் லாரிகளால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணல்மேடு பகுதி கொள்ளிடம் ஆற்றில் இயங்கிவரும் மணல் குவாரிகளில் மணல் அள்ளிச் செல்ல தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், மணல்மேடு அருகேயுள்ள பட்டவர்த்தி- கடக்கம் சாலையில் அடிக்கடி போக்குவரத்துப் பாதிக்கப்படுவதாகவும், இதனால், அந்த சாலையில் செல்லும் பேருந்துகளும் சரியான முறையில் இயக்கப்படுவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், பட்டவர்த்தி - கடக்கம் சாலை வைத்தியம்பேட்டையில் புதன்கிழமை திரண்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மணல் லாரிகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மணல்மேடு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை விலக்கிக்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →