பாதுகாப்பு முகாமாகவும் செயல்பட்ட அரசுப் பள்ளி
வேதாரண்யம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தலைஞாயிறில்,விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி பாதுகாப்பு முகாமாகவும் செயல்பட்டது.
வேதாரண்யம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தலைஞாயிறில்,விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி பாதுகாப்பு முகாமாகவும் செயல்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சிக்குள்பட்ட 14-வது வார்டுக்குள்பட்ட பிரிஞ்சிமூலை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 பேர்களுக்கான பாதுகாப்பு முகாம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உணவு சமைத்து மக்களுக்கு வழங்கும் பணியும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஒருவார கால விடுமுறைக்குப் பின்னர் பள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டது. மழையின் காரணத்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள 4 வகுப்பறை கட்டடங்களில் 2 கட்டடங்களில் உள்ள அறைகள் மாணவர்களுக்கும், ஒரு வகுப்பறை கட்டடம் மக்களுக்குமாக(இரவில் மட்டும் மூன்று கட்டடங்களும்) ஒதுக்கப்பட்டிருந்தன. மழை நீர் ஒழுகி காணப்படும் பழுதடைந்த மற்றொரு கட்டடத்தை யாரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை.