முகப்பு
நாகப்பட்டினம்

வழிப்பறி செய்யத் திட்டம்: 5 பேர் கைது

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டுப் பகுதியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வழிப்பறி செய்யத் திட்டம்: 5 பேர் கைது

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டுப் பகுதியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டுப் பகுதியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் நாகரெத்தினம், மேலமுக்கூட்டுப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் உருட்டுக் கட்டை, மிளகாய்ப் பொடி, கருப்புத்துணி ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு வழிப்பறி செய்யத் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்த மயிலாடுதுறை வட்டம், கேசிங்கன் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு. சரவணன் (28), ஆத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சா. செல்லத்துரை (35), வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெ. சேகரன்(35), பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மு. ராமலிங்கம் (53) மற்றும் ரெ. சாமி (63) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →