நாகப்பட்டினம்

சீர்காழி பகுதியில் சுகாதாரப் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

DIN

சீர்காழி நகராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் வியாழக்கிழமை ஆய்வு  மேற்கொண்டார்.
  சீர்காழி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி நடைபெறும் சுகாதாரப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்தார்.
 சீர்காழி ஈசானியத் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் அப்பகுதியைச் சுற்றி கழிவுநீர் தேங்கியிருந்ததைக் கண்டு நகராட்சி துப்புரவு அலுவலர்களை எச்சரித்தார். மேலும்,  உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி, சுகாதாரமாகப் பராமரிக்க அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையம்,  புழுகாப்பேட்டைதெரு, சுவாமிநாதசெட்டித்தெரு,  ரயிலடி தெரு  உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நகராட்சி ஆணையர் அஜிதாபர்வினிடம்  பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT