நாகப்பட்டினம்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம், சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ரோட்டரி மருத்துவப் பணி இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.
 சீர்காழி அரசு மருத்துவமணை சித்த மருத்துவர் சாகுல் ஹமீது, ரோட்டரி துணை ஆளுநர் சுசீந்திரன், திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்நாதன், மருத்துவ ஆலோசகர் சீதா ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பேசினர். பின்னர், இப்பள்ளி மாணவ, மாணவியர் 2,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் பரணிதரன் செய்திருந்தார். நிர்வாக அலுவலர் பழமலைநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT