நாகப்பட்டினம்

நலத் திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வாதார முன்னேற்றம் காண வேண்டும்: ஆட்சியர்

DIN

தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை மக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டு, வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என  நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கூறினார்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நரிமணம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அவர் பேசியது: மாவட்ட ஆட்சியரகத்தில் வாரம்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலர்கள், மக்களை நாடிச் சென்று கோரிக்கைகளுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நரிமணம் ஊராட்சி மக்கள் தொடர்பு முகாமில் 102 மனுக்கள் பெறப்பட்டு, 56 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி, அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தகுதியானவர்கள், நலத் திட்டங்களில் பயன்பெற்று தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் ஆட்சியர்.
இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ. 22.5 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டா உள்பட அரசுத் துறைகள் சார்பில் 82 பேருக்கு ரூ. 23.93 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
நாகை வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன், வேளாண் இணை இயக்குநர் சேகர், கால்நடைப் பராமரிப்புத் துறை கோவிந்தன், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் மதுமதி, திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT