நாகை, திருமருகலில் அக்டோபர் 21 மின்தடை
நாகப்பட்டினம், திருமருகல் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், திருமருகல் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்கமும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் அ. அப்துல் வஹாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாகை, திருமருகல், வேட்டைகாரனிருப்பு ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களிலிருந்து சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இடங்கள்: நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி., மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இடங்கள்: திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இடங்கள்: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.