முகப்பு
நாகப்பட்டினம்

தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற கவிஞருக்கு வரவேற்பு

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதுபெற்று சீர்காழி வந்த கவிஞர் காழி. கம்பன் (எ) வெங்கடேசபாரதிக்கு ரயில் நிலையத்தில் தமிழ் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு வரவேற்பு அளித்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதுபெற்று சீர்காழி வந்த கவிஞர் காழி. கம்பன் (எ) வெங்கடேசபாரதிக்கு ரயில் நிலையத்தில் தமிழ் ஆர்வலர்கள் வியாழக்கிழமை இரவு வரவேற்பு அளித்தனர்.
சீர்காழி சட்டநாதபுரம் கம்பன் நகரைச் சேர்ந்தவர் மு. வெங்கடேசபாரதி (78). ச.மு.இ. மேல்நிலைப்பள்ளியில்  தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தமிழ் இசை மூவரின் வரலாற்றைப் பற்றிய நூல், நலக்குறள்,  நலவெண்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 
மேலும், இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் கண்ணதாசன்,  குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் இவரது நூல்கள் குறித்து பாராட்டுத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். மு. வெங்கடேசபாரதியின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் விருதுபெற்று சீர்காழி வந்த அவருக்கு ரயில் நிலையத்தில் அவரது  குடும்பத்தினர், தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் திரண்டு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →