காவிரி விவகாரம்: வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், மீத்தேன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், மீத்தேன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வடக்கு வீதி, மேலவீதி வரை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் உரிய அழுத்தம் தராத மாநில அரசைக் கண்டித்தும், வேதாரண்யம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனர். மாலை 5.15-க்கு தொடங்கிய போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.