திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!
கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில், வேலூரில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் ஆலங்கட்டி மழை பெய்தது குறித்து...
கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத தொடங்கியது முதலே 100 டிகிரி "ஃ"பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் நிலவி வந்தது. இதனால், வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த இந்த ஆண்டு வியாழக்கிழமை அதிகபட்சமாக 108.3 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் மக்களை வாட்டி வந்தது. மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதி கொண்ட வேலூர் மாவட்டத்தின் கடைசி பகுதியான பேரணாம்பட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் மாலை நல்ல காற்று வீசியது. திடீரென ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதனால், பேரணாம்பட்டு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
திடீரென பெய்த ஆலங்கட்டி மழையினால் வெப்பக் காற்று குறைந்து குளிர்ச்சி நிலவியது. எனினும், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சிறுவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
Regarding the hailstorm that fell in Vellore for more than half an hour on Thursday evening...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.