முகப்பு
நாகப்பட்டினம்

குத்தாலம் வட்டார வள மையக் கட்டடத்தில் தீ விபத்து

நாகை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை  தீ விபத்து  ஏற்பட்டது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:52 AM
பகிர்:

நாகை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை  தீ விபத்து  ஏற்பட்டது.
குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மைய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அந்தக் கட்டடம் பழுதடைந்ததால் அங்கு செயல்பட்டு வந்த அலுவலகமானது தற்போது மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழையக் கட்டடத்தின் அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி, கட்டடத்துக்கும் பரவியது. இதில், அங்கிருந்த கோப்புகள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்த மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.