முகப்பு
நாகப்பட்டினம்

தமுமுக நிர்வாகிகள் தேர்வு

மயிலாடுதுறை நகர தமுமுக நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:53 AM
பகிர்:

மயிலாடுதுறை நகர தமுமுக நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ஓ. ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ். ஆரீப், தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ. முஜிபுதீன், எம். அப்துல் கபூர், மமக மாவட்டத் துணைச் செயலாளர் பி.எஸ்.எம். புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை அக்பர் தேர்தல்  நடத்தும் அலுவலராகப் பொறுப்பு வகித்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து, அறிவித்தார்.
அதன்படி, கட்சியின் நகரத் தலைவராக  எம். சையது இஸ்மாயில், செயலராக பெளஜி ரஹ்மான், பி.எம். பாஷீத், துணைத் தலைவராக ஹீமாயூன், பொருளாளராக முஹம்மது சலீம் மற்றும் பி. ஹாஜா நஜிமுதீன், எஸ்.பி. திப்பு சுல்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, கட்சியின்  விவசாய அணியைச் சேர்ந்த  ஓ.எம். ஏ.முசாஹூதீன் மற்றும்  நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.