நாகப்பட்டினம்

பூட்டிக் கிடக்கும் கன்னங்குடி நூலகம் திறக்கப்படுமா ?

DIN

பொறையாறு அருகே கன்னங்குடியில் பூட்டியே கிடக்கும் நூலகத்தை மீண்டும் திறந்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொறையாறு அருகே கிள்ளியூர் ஊராட்சிகுள்பட்ட கன்னங்குடியில், கன்னங்குடி, கிள்ளியூர், ராமன்கோட்டகம், காளக் கட்டளை, ஏரி, வெள்ளத்திடல் ஆகிய ஊர்களை சேர்ந்த கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.3.50 லட்சம் செலவில் நூலகம் 2011-ஆம் ஆண்டு கட்டிப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நூலகத்தில், மின்வசதி, இருக்கை வசதி, புத்தகங்கள் வைப்பதற்கான அடுக்கு அலமாரிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், இங்கு சிறுகதைகள், அறிவியல் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், நாவல்கள், கண்டுபிடிப்புகள், சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் வாரியாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே குறிப்பிட்டுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி 
வந்தனர். 
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நூலகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இப்பகுதி சார்ந்த மக்கள் அருகில் உள்ள டி. மணல்மேடு, திருக்கடையூர் ஆகிய ஊர்களில் உள்ள நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை படித்து வருகின்றனர். இதில், பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கன்னங்குடியில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT