நாகப்பட்டினம்

படைப்பணி ஆவணங்களை குறுந்தகட்டில் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

DIN

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் படைப்பணி ஆவணங்களை குறுந்தகட்டில் பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படைவீரர்கள் மற்றும் படைவீரர் விதவையர்களின் பதிவுகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. எனவே, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் படைப்பணி விவரங்கள் குறித்த ஆவணங்களை பதிவேற்றிய குறுந்தகடு மற்றும் அசல் ஆவணங்களை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். படைவிலகல் சான்று, சாதிச் சான்று, சமமான பட்டதாரி சான்று ஆகியவற்றை 4 எம்பி அளவில் பிடிஎப் பதிவாகவும், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை 2 எம்பி அளவில் பிடிஎப் பதிவாகவும், புகைப்படத்தை ஒரு எம்பி அளவில் ஜேபிஜி பதிவாகவும் ஸ்கேன் செய்து குறுந்தகட்டில் பதிவேற்ற வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 04365 253042 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT