நாகப்பட்டினம்

புயல்: சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

DIN

சமூக வலைதளங்களில் புயல் குறித்த தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கடல் மட்டம் உயரும் எனவும், இதனால் கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்கவைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT