நாகப்பட்டினம்

கூட்டுறவு வங்கிக்கு ரூ. 24 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி ஆய்வு

DIN

சீர்காழியை அடுத்த செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு ரூ. 24 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை வங்கித் தலைவர் ஆய்வு செய்தார்.
செம்மங்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நவீன லாக்கர் வசதி கொண்ட கான்கிரீட் கட்டடத்துடன் புதிய கட்டடம் கட்ட ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜமாணிக்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை தரமாக கட்டுவதுடன் விரைந்து முடித்திடவும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் சரவணகோபால், கள அலுவலர் ராமலிங்கம்,  கூட்டுறவு வங்கி செயலர் மருதுபாண்டியன்,  நிம்மேலி கூட்டுறவு வங்கி எழுத்தர் சக்தி, கூட்டுறவு வங்கி விற்பனையாளர்கள் ரவி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT