முகப்பு
நாகப்பட்டினம்

கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற கோரிக்கை

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்குள்பட்ட திருக்கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு

Updated On : 9 ஜூலை, 2018 at 7:23 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்குள்பட்ட திருக்கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலர்  கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்குள்பட்ட திருக்கோயில்களில் பக்தர்கள் அகல்விளக்கு, கார்த்திகை விளக்கு, சுட்டி விளக்கு, மண் விளக்கு, லட்சுமி விளக்கு உள்ளிட்ட தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆர்.ஜெயா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேற்படி சுற்றறிக்கையில் 12 -ஆவது கருத்தாக விளக்கேற்றுதலை முறைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விளக்கேற்றி வழிபடுவதையும், முறைப்படுத்துவதையும் பக்தர்கள் எதிர்க்கவில்லை. கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்த கோயில் அதிகாரிகள் தடை விதிப்பதை கைவிட வேண்டியும், இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிடவும் வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.