உண்டு உறைவிடப் பள்ளியில் ஓவியப் போட்டி
நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு
நாகை வட்டாரம், சிக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழக்கரையிருப்பில் உள்ள வானவில் உண்டு உறைவிடப்பள்ளியில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி மற்றும் விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், மாணவ, மாணவியரிடையே உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர். ஷாலினி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர்கள் ஆர். ரேவதி, கே. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.