முகப்பு
நாகப்பட்டினம்

பாமக ஆர்ப்பாட்டம்

திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை புதன்கிழமை பாமகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 9:34 AM
பகிர்:

திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை புதன்கிழமை பாமகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தேர்தலையொட்டி, கடந்த 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அப்போது, பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, புதன்கிழமை மதியம் பாமக நாகை மாவட்ட அமைப்புச் செயலாளர் அச்சுவெல்லம் (எ) ராஜரத்தினம் தலைமையில், அக்கட்சியினர் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் வேலுதேவி, சார்பு ஆய்வாளர் ராமமுர்த்தி ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பாமக மாவட்டத் துணைச் செயலாளர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் ராஜீவ்காந்தி, இளைஞரணி செயலாளர்கள் சுமன், குமணன், சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த சுல்தான்காதர், புகாரி மற்றும் நிர்வாகிகள் கண்ணன், தில்லைநாயகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.