மன்னார்குடியில் நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மன்னார்குடியில் புதன்கிழமை (மே 23) நடைபெறுகிறது.
மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மன்னார்குடியில் புதன்கிழமை (மே 23) நடைபெறுகிறது.
மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள மின்வாரிய குறைதீர் கூட்டத்தில், மன்னார்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் கலந்துகொண்டு, தங்கள் பகுதியைச் சார்ந்த மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் கி. ராதிகா தெரிவித்துள்ளார்.