நாகப்பட்டினம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு மாணவர்கள் பாடுபட வேண்டும்: அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்ட மைய இயக்குநர்

DIN

பொறியியல் பட்டம் பெறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என  அண்ணா பல்கலைக்கழகக் கல்வித் திட்ட மைய இயக்குநர் ஆர். ராஜூ கூறினார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் 18 -ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் என். விஜயரெங்கன் தலைமை வகித்தார். செயலர் கே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
விழாவில்,  ஆர். ராஜூ மேலும் பேசியது:
மாணவர்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல தொடக்கத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும். கற்ற கல்வியை வாழ்வாதாரத்துக்கு சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வியறிவு மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும் என்றார்.
தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் 538 பேருக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 மாணவர்களுக்கு தங்க காசுகளையும் அவர் பரிசாக வழங்கினார். விழாவில், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் பி.என். ரத்தினகுமார், எஸ். ஜெயக்குமார், எம். ராஜசேகரன், ஜி.வி. ராகவன், என். ஞானசுந்தர், கல்லூரி நிர்வாக இயக்குநர் எம். செந்தில்முருகன், துணை முதல்வர்  எஸ். செல்வமுத்துக்குமரன், முதன்மையர் ஜி. பிரதீப் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் எஸ். விஜயராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT