நாகப்பட்டினம்

மயிலாடுதுறை நுகர்வோர் மொத்த  பண்டகசாலையில் பட்டாசு விற்பனை நிலையம் திறப்பு

DIN

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நுகர்வோர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை நாராயணப்பிள்ளை தெருவில் இயங்கிவரும்,நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டக சாலையில்,ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நிலையம் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் பட்டாசு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.  நிகழாண்டுக்கான  தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில்,தொகுதி எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பட்டாசு விற்பனை நிலையத்தைத்  திறந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பண்டகசாலை கண்காணிப்பாளர் மரியஅந்துவம், முன்னாள் தலைவர் எஸ்.அலி, துணைத் தலைவர் அருணாச்சலம், இயக்குநர் செல்வசேகரன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT