நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய 7 பேர் கைது

DIN

நாகையில், வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருடிய 6 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை, வெளிப்பாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகை, ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி தமிழ்ச்செல்வி. மருத்துவரான இவரது வீடு பழுதடைந்துள்ளதால், அந்த வீட்டை பூட்டி விட்டு, கடந்த 4 மாதமாக அருகில் உள்ள சுப்பையா முதலியார் தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டை சனிக்கிழமை சென்று பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
இந்த விசாரணையில், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த சேகர் மகன் விஜய் (17), வெளிப்பாளையம் ஹூக்ஸ் சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் முத்துக்குமார் (16), சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் தீபக்ராஜ் (15), லூர்துசாமி மகன் எடிசன் (22), புதிய நம்பியார் நகரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் ஜெகதீஷ் என்கிற தினேஷ் (15), பாலசுப்பிரமணியன் மகன் தனுஷ்(15), காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி மகன் சரவணன் (16)ஆகிய 7 பேர் தமிழ்ச் செல்வி வீட்டில் நகைகளை திருடியது  தெரியவந்தது.
இதையடுத்து, 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களில், எடிசன்  நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர்கள் 6 பேரும் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT