முகப்பு
நாகப்பட்டினம்

குறுவட்டப் போட்டிகள்: சீர்காழி பெஸ்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில், சாதனை படைத்த பெஸ்ட் மெட்ரிக்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:44 AM
பகிர்:

நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில், சாதனை படைத்த பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான குறுவட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 
இதில், பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இளையோர், மேலோர் மற்றும் மேன்மேலோர் பிரிவுகளில் கலந்துகொண்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், முதல்வர் ராமலிங்கம், நிர்வாக அதிகாரி சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.