பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருவாய் துறை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, மயிலாடுதுறை வட்டாட்சியர் து.விஜயராகவன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பட்டமங்கலம் கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி, சீனிவாசபுரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தவிர்க்க வலியுறுத்தியும் முழக்கமிட்டப்படி வந்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜி. திருமலைப்பாண்டியன் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்துப் பேசினார்.
கிராம நிர்வாக அலுவலர் கலையரசன், அரசு அலுவலர்கள் பிரபாகரன், சீனிவாசன், வளைகரங்கள் தொண்டு நிறுவனத் தலைவர் எஸ். சாருபாலா, சமூக ஆர்வலர்கள் து. ஈழவேந்தன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில், ஊராட்சி செயலர் சாந்தி நன்றி கூறினார்.