நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட  சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்பேரில், சுகாதாரத்துறை  வட்டார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பகுதி சுகாதார மேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் வேளாங்கண்ணி பேருந்து நிலையம், கடற்கரை சாலை, பேராலயம் மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகள், சிறு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களை அடையாளம்கண்டு, அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT