நாகப்பட்டினம்

புதிய அங்காடி கட்டடம் திறப்பு

DIN


சீர்காழி அருகேயுள்ள திட்டை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்காடி கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திட்டை ஊராட்சியில் சேதமடைந்த கட்டடத்தில் அங்காடி கடை இயங்கி வந்தது. இக்கடையில் 787 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி பயன்பெற்றனர். இந்நிலையில், புதிய அங்காடி கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டடத்தை சீர்காழி எம்.எல்.ஏ. பி.வி. பாரதி திறந்து வைத்து அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கினார். கூட்டுறவு சார் பதிவாளர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT